
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – MyIMMs அமைப்பை ஹேக் செய்து, தற்காலிக வேலை வருகை அனுமதிப்பத்திரங்களை (PLKS) சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக நடைபெற்று வரும் ‘ஒப் கிராக்’ (Op Crack) விசாரணையில், மேலும் ஐந்து குடிநுழைவு துறை அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது.
30 மற்றும் 40 வயதுடைய நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர். முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் PLKS விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்க MyIMMs அமைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்கள் மீது சந்தேகம் நிலவுகிறது.
இதுவரை 17 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 300,000 ரிங்கிட் மதிப்பிலான ஒன்பது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு MACC சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. முன்பு நடைபெற்ற Op Crack நடவடிக்கையில் இதே வழக்கில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.



