
ஸாஹிட்: மலாக்காவில் தேசிய முன்னணி அனைத்து 21 தொகுதிகளையும் தற்காத்துக் கொள்ளும்
புத்ராஜெயா, ஆகஸ்ட்.06-மலாக்கா மாநிலத் தேர்தலில், பாரிசான் நேசனல் (BN) ஏற்கனவே கைவசம் உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள இலக்கு கொண்டுள்ளது. BN தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அத்தொகுதிகளை BN தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மலாக்கா முதலமைச்சரும் மாநில BN தலைவருமான Datuk Seri Ab Rauf Yusoh, அந்த எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், தேர்தலுக்குத் தயாராகும் வகையில் எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும், புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளவும் BN தயாராகவே உள்ளதாக துணைப்பிரதமருமான Ahmad Zahid கூறினார்.
வழக்கமாக அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கலந்தாலோசனைகள் நடைபெறும். மேலும், மலாக்கா முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளபடி, அவர் அவ்விஷயத்தில் மிகவும் வெளிப்படையான அணுகுமுறையைக் கொண்டுள்ளார். எந்தவோர் உடன்படிக்கை அல்லது புரிதல் குறித்தும் இறுதி முடிவு எடுக்கும் முன், BN-இன் மத்தியத் தலைமைத்துவத்திலும் கலந்தாலோசிக்கப்படும் என Ahmad Zahid விளக்கினார்.
மலாக்காவில் மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 2021 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் BN 21 தொகுதிகளை வென்றது. Pakatan Harapan 5 இடங்களையும் Perikatan National இரு இடங்களையும் வைத்துள்ளன.



