Latestமலேசியா

சிலாங்கூர், KLIA-வில் அதிரடி சோதனை: RM37.5 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்; 12 பேர் கைது

ஷா ஆலாம், ஆகஸ்ட்-20-சிலாங்கூர் மற்றும் KLIA-வில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 37.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களை சிலாங்கூர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.

​ஆகஸ்ட் 4 முதல் 17 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் நடவடிக்கையில், மொத்தம் 12 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.அவர்களில், ஐவர் உள்நாட்டினர், 7 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.

2 சம்பவங்கள் குடியிருப்புகளை உட்படுத்திய வேளை, 4 சம்பவங்கள் KLIA-வில் பயணப் பெட்டிகள் வாயிலாக போதைப்பொருளைக் கடத்தும் முயற்சியாகும்.

​கைதான வெளிநாட்டினர், வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக அதிக சம்பளம் தரும் வேலை வாய்ப்புகளால் ஏமாற்றப்பட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களாக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

​இந்த சோதனைகளில் ஷாபு, கஞ்சா, ஹெரோயின் மற்றும் கொக்கேய்ன் உட்பட 600 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களில் ஒருவருக்கு, இந்தக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

எஞ்சியவர்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டும், நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!