Latestமலேசியா

காஜாங்கில் கொலை முயற்சி: சாலையோரத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர்; 4 பேர் கைது

காஜாங், ஆகஸ்ட்-31,சிலாங்கூர், காஜாங், தாமான் வெஸ்ட் கண்ட்ரியில் சனிக்கிழமை அதிகாலை கடுமையானக் காயங்களுடன் சாலையோரத்தில் மீட்கப்பட்ட 26 வயது இளைஞரின் கொலை முயற்சி வழக்கில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 4 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.

​அதிகாலை இரண்டரை மணியளவில் போலீஸுக்குத் தகவல் கிடைத்த நிலையில், தெரிந்த நபர்களாலேயே கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த இளைஞர், உடனடியாக சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

​கைதான நால்வருக்கும் ஏற்கனவே குற்றப் பின்னணி மற்றும் போதைப்பொருள் வழக்குகள் இருப்பதை காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!