Latestஉலகம்

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதலில் 18 பேர் பலி, 108 பேர் காயம்; பதிலடியாக அமெரிக்கத் தளங்களைத் தாக்கிய ஈரான்

ஈரான், செப்டம்பர் 3 – ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 108 பேர் காயமடைந்ததாக ஈரான் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகடுமையாகக் கண்டித்துள்ளது. நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஈரான் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மீண்டும் ஈரானின் இறையாண்மையை மீறி, பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள இடங்கள் மற்றும் சேவை உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டதுடன், பொது மற்றும் தனியார் சொத்துகளும் சேதமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்களைத் தாக்க முயன்றதாகக் கூறி, ஈரானின் இராணுவ இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, ஈரான் ஜோர்டான், குவைத், பஹ்ரைன், ஈராக்கின் குர்திஸ்தான் (Jordan, Kuwait, Bahrain, Kurdistan) பகுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!