Latestமலேசியா

செப்.16 வெளியாகிறது ‘Beat’le Gaana’; இசைப் பயணத்தின் அடுத்த கட்டத்தில் ஏ.ஜி. பரஞ்சோதி!

கோலாலம்பூர், செப். 4 – மலேசியக் கலைஞர் ஏ.ஜி. பரஞ்சோதி ராஜேந்திரனின் புதிய ‘Beat’le Gaana’ இசைக் காணொளி வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியீடு காணவுள்ளது.

ஷா ஆலாமில் உள்ள TSR Conference Hall-இல் மாலை 6 மணிக்கு நடைபெறும் வெளியீட்டு விழாவில், விஜய் தொலைக்காட்சியின் ‘சின்ன மருமகள்’ தொடர் புகழ் நடிகர் நவீன் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். பொதுமக்களும் இலவசமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

சுங்கை மணம் எஸ்டேட்டில் சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்ட பரஞ்சோதி, உருமி மேளம் மற்றும் பக்திப் பாடல்களுடன் தனது பயணத்தைத் தொடங்கினார். வேலை, குடும்பம் என வாழ்க்கை நகர்ந்தாலும் இசையின் மீதான ஆர்வத்தை மட்டும் இவர் கைவிடவில்ல என இவர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் பல பாடல்களை வெளியிட்ட பரஞ்சோதிக்கு, Anthony Daasan உடனான ‘Thaaye Gangamma’ உள்ளிட்ட படைப்புகள் நல்ல வரவேற்பையும் பரவலான அறிமுகத்தையும் பெற்றுத் தந்தன. இவரது YouTube தளமும் இன்று 1.5 லட்சம் subscribers-ஐ கடந்துள்ளது.

அண்மையில் தமிழ் மற்றும் மலாய் மொழிகளில் வெளியான ‘Yelai Yelalo’ பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடல் தனக்கு ஏற்படுத்திக் கொடுத்த புதிய வாய்ப்புகள் குறித்து பரஞ்சோதி பகிர்ந்துகொண்டார்.

‘Yelai Yelalo’ பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் தமிழ், மலாய் ரசிகர்களிடம் சென்றடைந்தது குறித்து]

இதன் தொடர்ச்சியாக தற்போது ‘Beat’le Gaana’ பாடலுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பரஞ்சோதி, மேலும் சில புதிய இசைப் படைப்புகளையும் தயார்படுத்தி வருகிறார்.

Anthony Daasan உடனான ‘Aiyayo Kadhali’, Psycho Mantra உடனான ‘Themmangu Rap’ மற்றும் அடுத்தடுத்த படைப்புகள் குறித்துதனது இசைப் பயணத்தில் வெற்றிகள் மட்டுமின்றி, பல சவால்களையும் விமர்சனங்களையும் சந்தித்ததாக பரஞ்சோதி கூறினார்.

அந்தப் பயணத்தில் தனக்கு தொடர்ந்து துணையாக இருந்த மனைவி அம்பிகாவுக்கும் இவர் நன்றி தெரிவித்தார்.

மனைவி அம்பிகாவின் ஆதரவு, குடும்பத்தின் பங்களிப்பு குறித்துஇசையில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ள பரஞ்சோதி, அடுத்ததாக சொந்த இசைப் பதிவு நிலையத்தைத் தொடங்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளார்.

அதன் வழி, வளர்ந்து வரும் மலேசியக் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் இவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!