
புத்ராஜெயா, செப்டம்பர்-5,நேப்பாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு உதவ, மலேசியாவின் 11 பேர் கொண்ட SMART மீட்புக் குழுவினர் இன்று அங்குப் பயணமாகின்றனர்.
நேப்பாள அரசின் அனுமதியைத் தொடர்ந்து, உயர்திறன் கொண்ட ட்ரோன்கள் மற்றும் நவீன கருவிகளுடன் இக்குழு அனுப்பப்படுவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேப்பாளம் மற்றும் சீனாவில் உள்ள 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ள விஸ்மா புத்ரா, உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவும், DNA பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மற்றொரு சிறப்புப் படை காட்மண்டு சென்றுள்ளதாகக் குறிப்பிட்டது.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேப்பாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் 1,280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.



