
மாரான், செப்டம்பர்-11,பஹாங்கில் உள்ள பொதுக் கழிவறை ஒன்றில், இளைஞரை இரகசியமாக வீடியோ எடுத்ததாகக் கூறி 39 வயது அரசு ஊழியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் உள்ளூர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நிகழ்ந்ததாக மாரான் மாவட்டப் போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்தார்.
அங்கிருந்த கழிப்பறையில் தம்மை யாரோ வீடியோ எடுப்பதைக் கவனித்த 22 வயது இளைஞர், உடனடியாகப் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்டத் தேடுதலில், அருகிலிருந்த உணவகம் ஒன்றில் சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டார்.
கழிவறைக்குள் அந்த இளைஞரைப் புகைப் படங்களும் வீடியோவும் எடுத்ததை அந்த அரசு ஊழியர் ஒப்புக் கொண்டதாகப் போலீஸார் கூறினர்.
அவருடைய கைப்பேசியும் விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்தச் சந்தேக நபர் 3 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்.
பெண்கள் அல்லது தனிநபர்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தல் மற்றும் ஆபாசப் பொருட்களை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.



