
கேமரன் மலை தானா ராத்தாவில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் நீடித்த பலத்த மழை காரணமாகச் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோல்டன் ஹில்ஸ் குடியிருப்புப் பகுதி மற்றும் MARDI விவசாயத் தொழில்நுட்பப் பூங்கா ஆகிய இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததில் 5 முதல் 6 வீடுகள் பாதிக்கப்பட்டதாக தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் Ho Chi Yang தெரிவித்தார்.
அருகிலுள்ள ஆறு அரோகணிப்பு மற்றும் சாக்கடை வடிகால் அடைப்பு காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வேளையில், பயன்பாடு குறைவாக உள்ள Jalan Tengkolok-கில் ஒரு சிறிய நிலச்சரிவும் பதிவாகியுள்ளது.
எனினு, இந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயங்களோ அல்லது பொதுச் சொத்துக்களுக்குப் பேரழிவோ ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.



