Latestஉலகம்

இந்தியாவில் சினிமா பாணியில் மிளகாய்ப் பொடியைத் தூவி SBI வங்கியில் பணம் கொள்ளை

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் SBI வங்கிக் கிளையில் மிளகாய்ப் பொடியைத் தூவிக் கொள்ளையடித்த நபர், 30 நிமிடங்களிலேயே போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

​வங்கிக்கு முகத்தை மூடியபடி வாடிக்கையாளரைப் போல் சென்ற 28 வயது ஆடவர், ரொக்கப் பிரிவில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

​ஊழியர்கள் கண் எரிச்சலால் அலறியடித்த நிலையைப் பயன்படுத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த 435,000 ரூபாய் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றி அந்நபர் தப்பிச் சென்றார்.

​வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாகப் பின்தொடர்ந்த ரோந்துப் போலீஸார், அரை மணி நேரத்திற்குள் அவரைச் சுற்றி வளைத்துக் கைதுச் செய்தனர்.

​வேலையில்லாத விரக்தியில் இக்குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்ட சந்தேக நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட முழுப் பணமும் மீட்கப்பட்டு, வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!