Latestமலேசியா

8 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

கோலாலம்பூர், செப்டம்பர் 14 – மலேசியாவில் இன்று காலை 7 மணி நிலவரத்தின் படி 8 பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடான IPU ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

மலேசியக் காற்று மாசுக் குறியீட்டு நிர்வாக அமைப்பின் (APIMS) அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, சரவாக்கில் செரியான் பகுதியில் 173, ஸ்ரீ அமான் பகுதியில் 171, கூச்சிங்கில் 134 என்ற அளவில் IPU பதிவாகியுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் சிலாங்கூரின் ஜோஹான் செத்தியா (Johan Setia) மற்றும் கோலாலம்பூரின் செராஸ் ஆகிய பகுதிகளில் தலா 152 என்ற அளவில் பதிவானது. நெகிரி செம்பிலானின் நீலாய் பகுதியில் 127, சிரம்பானில் 122, புத்ராஜெயாவில் 121 என்ற அளவிலும் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

இதனிடையே, 58 இடங்களில் மிதமான நிலையில் காற்றுத் தரம் பதிவாகியுள்ளதுடன், மேலும் இரு இடங்களில் நல்ல காற்றுத் தரம் காணப்பட்டது. IPU 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையாகவும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையாகவும், 301-க்கும் மேல் அபாயகரமான நிலையாகவும் வகைப்படுத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!