
திரெங்கானு, செப்டம்பர் 14 – திரெங்கானு, ஜெர்த்தே, பாடாங் லுவாஸ் பகுதியில் நேற்று காலை சாலையில் ஏராளமான கெளுத்தி மீன்கள் கொட்டிக் கிடந்தது வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மீன்கள் பெரிய அளவில் சாலையிலும் சாலையோரத்திலும் சிதறிக் கிடந்ததால், அந்தப் பகுதியைக் கடந்து சென்ற வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
விசாரணையில், மீன்கள் புதிதாக திறக்கப்பட்ட குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டவை என்றும், அவற்றை ஏற்றிச் சென்ற லாரியின் கதவு உடைந்ததால் மீன்கள் சாலையில் விழுந்ததாகவும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளையும் பெற்றது. சிலர், சாலையில் கிடந்த மீன்களைச் சுட்டிக்காட்டி, “இவற்றை எடுத்துச் சென்று சமைக்கலாம் போல இருக்கிறது” என வேடிக்கையாகக் கருத்து தெரிவித்தனர்.



