
மலாக்கா, செப்டம்பர்-16,மலாக்கா மாநில மக்களின் நலனுக்காக மடானி அரசாங்கம் 128.2 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
புக்கிட் பாருவில் ‘Sentuhan Kasih’ நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் இதனை அறிவித்தார்.மொத்தம் 24 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்நிதி பயன்படுத்தப்படும்.
இதில் சுங்கை ஊடாங் கழிவு மேலாண்மை மையத்திற்கு 32.8 மில்லியன் ரிங்கிட்டும், 390 ‘Rumah Mesra Rakyat’ வீடுகளுக்கு 29.6 மில்லியன் ரிங்கிட்டும், மலாக்கா சென்ட்ரல் சந்தை உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு 24.9 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்று சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருகையின் போது, மக்கள் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், வசதிக் கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவற்றையும் அமைச்சர் நேரில் கண்காணித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் குறித்த நேரத்தில் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
Church of Our Lady of Guadalupe தேவாலயத்திற்கு நிதியுதவி வழங்கிய நிகழ்வோடு அமைச்சரின் பயணம் நிறைவுற்றது.



