
கூலிம், செப்டம்பர்-17,கூலிம், தாமான் திராமில் உயிரிழந்த 39 வயது எஸ். ஷீலாவின் மறைவுக்கு செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பினாங்கு, பிறையில் உள்ள ஷீலாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற லிங்கேஷ்வரன், இறுதி மரியாதை செலுத்தியதுடன், இந்தத் துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியையும் வழங்கினார்.
ஷீலாவின் 3 வயதுக் குழந்தை தாயை இழந்து நிற்கும் நிலை குறித்து வேதனை தெரிவித்த அவர், குடும்ப வன்முறை என்பது எந்த சூழ்நிலையிலும் இயல்பாக்கப்படக்கூடாத ஒரு தீவிரமான குற்றமாகும் என வலியுறுத்தினார்.
குடும்ப வன்முறை அல்லது மிரட்டல்களை எதிர்கொள்பவர்கள் அமைதியாக இருக்காமல் உடனடியாக உதவி பெற வேண்டும்.
அதே சமயம் சுற்றியுள்ளவர்கள் வன்முறையின் அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஷீலா முன்னதாக தனது சொந்தக் கணவராலேயே 13 முறைக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.



