
சிரம்பான், செப்டம்பர்-17,நெகிரி செம்பிலான் மாநில அரியணை தொடர்பான சர்ச்சையில், தற்போது புதிய அரசியலமைப்புச் சிக்கல் வெடித்துள்ளது.
நான்கு Undang மற்றும் மந்திரி பெசார் கையெழுத்திட்ட பிரகடனத்தை மேற்கோள் காட்டி, துவாங்கு முஹ்ரிஸ் இனி மாநிலத்தின் சமஸ்தானாதிபதி அல்ல என்றும், Tuanku Nadzaruddin Tuanku Ja’afar புதிய ஆட்சியாளராக அங்கீகரிக்கப்படுவதாகவும் மாநில ஆட்சிக் குழு அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த அறிவிப்புக்கு உடனடியாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரெம்பாவ் உண்டாங், Hassan Ab Hamid கூறுகையில், “எந்தவொரு நிர்வாக அமைப்போ அல்லது ஆட்சிக் குழுக் கூட்டமோ மாநில அரசியலமைப்பையோ அல்லது DKU எனப்படும் ‘Dewan Keadilan Dan Undang’ அமைப்பின் அதிகாரத்தையோ மீற முடியாது” எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முறையான விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாததால், துவாங்கு முஹ்ரிஸை நீக்க வெளியிடப்பட்ட பிரகடனம் அடிப்படை குறைபாடுகளைக் கொண்டது என்றும், பாரம்பரிய விஷயங்களில் DKU முடிவே இறுதியானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, துவாங்கு முஹ்ரிஸை அரியணையிலிருந்து நீக்குவதாகக் கூறி வெளியான கடிதத்தில் தாம் கையெழுத்திட்டதே வற்புறுத்தலின் பேரிலேயே என, மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமும் கூறியுள்ளார்.
எனவே, ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பெயரில் வெளிவந்த கடிதம் செல்லாது என Hassan தெரிவித்தார்.



