Latestமலேசியா

மலாய்க்காரர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியல் ஸ்திரத்தன்மை தேவை – பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து கட்சி

கோலாலம்பூர், செப்-17-மலாய்க்காரர்கள் மட்டுமல்லாமல், அனைத்து இன மற்றும் மத சமூகங்களும் அரசியல் நிலைத்தன்மையும் ஒற்றுமையையும் அனுபவிக்க வேண்டும் என சரவாக் மாநிலம் விரும்புகிறது. பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (PBB) கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Datuk Seri Abdul Karim Rahman Hamzah அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தீபகற்ப மலேசியாவில் இனம் மற்றும் மதம் சார்ந்த அரசியல் போக்குகள் அதிகரித்து வருவது, சபா மற்றும் சரவாக் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவை வழிநடத்துவதற்கான தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் போது, இனம் மற்றும் மதத்தைத் தாண்டி சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, தீபகற்ப மலேசியாவில் ஏற்படும் அரசியல் நிலைத்தன்மையின்மை, சபா மற்றும் சரவாக் உட்பட நாடு முழுவதையும் பாதிக்கும் என்றும் Karim சுட்டிக் காட்டினார். மலாய்க்காரர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மேற்கு மலேசியத் தலைமையின் மீது சபா மற்றும் சரவாக் தலைவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடும் என அம்னோ பொதுப்பேரவையில் கட்சியின் உதவித் தலைவர் Datuk Seri Khaled Nordin கூறியிருந்தது தொடர்பில் Karim கருத்துரைத்தார்.

மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சமமான பங்காளிகள் என்பதை நினைவூட்டிய அவர், தீபகற்பத்தில் உள்ள தலைவர்கள் இரு மாநிலங்களின் கவலைகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றார். நிலையற்ற அரசியல் சூழல், குறிப்பாக வெளிநாட்டு உறவுகளிலும் எதிர்கால வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே, கூட்டரசு அரசாங்கத்தை அமைக்க ஆதரவு தேடும் தீபகற்ப மலேசியக் கட்சிகளுக்கு GPS முக்கியமான கூட்டாளியாக இருப்பதாக Karim தெரிவித்தார். மலேசியாவை யார் வழிநடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் GPS இல்லாவிட்டாலும், தேசிய அரசாங்கத்தில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் சக்தியாக அது செயல்படும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!