
கோலாலம்பூர், செப்டம்பர்-18,மலேசியாவின் முன்னணி 24 மணி நேர சில்லறை விற்பனை நிறுவனமான KK MART, தனது புதிய கிளையைக் கோலாலம்பூர் போலீஸ் தலைமையக (IPK KL) வளாகத்திற்குள் திறந்துளளது.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் மற்றும் KK MART நிறுவனத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr சாய் கீ கான் (Chai Kee Kan) ஆகியோர் அதனை திறந்து வைத்தனர்.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அன்றாடத் தேவைகளை எளிதில் பூர்த்திச் செய்யும் வகையில் இந்த 24 மணி நேரக் கிளை அமைக்கப்பட்டுள்ளது.
வியாபாரத்தையும் தாண்டி, மாநகரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த KK MART போலீஸ் துறையுடன் இணைந்து செயல்படுகிறது.
குற்றப் புலனாய்வுச் சோதனைகளுக்கு உதவும் வகையில், தனது 24 மணி நேர CCTV கண்காணிப்பு மையத்தின் முழு ஒத்துழைப்பையும் வழங்க இந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மேலும், பொது மக்களின் விழிப்புணர்வுக்காக 2 லட்சம் PDRM அவசர உதவி அட்டை அச்சடித்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
‘Go To Safety Station’ மற்றும் கைப்பேசி செயலி வாயிலான பாதுகாப்புத் திட்டங்களிலும் PDRM உடன் இணைந்து செயல்பட KK MART திட்டமிட்டுள்ளது.
இந்தக் கூட்டு முயற்சி போலீஸ் வீரர்களின் நலனுக்கும் சமூகப் பாதுகாப்புக்கும் பெரும் பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



