Latestமலேசியா

Festival Mega iLINDUNGu; 25 நிறுவனங்கள் பங்கேற்பு; 2,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன!

கோத்தா டாமன்சாரா, செப்-19 –வேலை வாய்ப்புக் கண்காட்சி, அரசாங்கச் சேவைகள், விளையாட்டுகள், பரிசுப் பொருட்கள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் Festival Mega iLINDUNGu 2026 விழா கோத்தா டாமன்சாரா, Strand Mall-இல் களைகட்டியது.

PERKESO ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், MYFutureJobs வேலை வாய்ப்புக் கண்காட்சியில் 25 நிறுவனங்கள் பங்கேற்று, சுமார் 2,000 வேலை வாய்ப்புகளை வழங்கின.

மேலும், பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் தனித்தனி முகப்புகளை அமைத்து, தங்களது சேவைகள் மற்றும் உதவித் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கின.

இந்த விழாவில் பங்கேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்களது முகப்புகளில் வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பு குறித்து வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

இதனிடையே, விழாவில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், பரிசுப் பொருட்களையும் பெற்றுச் சென்றனர்.

ஒரே இடத்தில் வேலை வாய்ப்புகள், அரசாங்கச் சேவைகள் எனப் பல்வேறு பயன்களைப் பெற்றுக்கொண்ட பொதுமக்களும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

வேலை வாய்ப்புகள், அரசாங்கச் சேவைகள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எனப் பல்வேறு பயன்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது Festival Mega iLINDUNGu 2026 விழா.

தகவல்களை வழங்குவதோடு மட்டுமின்றி, மக்களையும் அரசாங்க நிறுவனங்களையும் நேரடியாக இணைக்கும் தளமாகவும் இந்த விழா அமைந்துள்ளது.

செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்வதுடன், பல்வேறு நடவடிக்கைகளிலும் பங்கேற்று பயன்பெறலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!