Latestமலேசியா

நஜீப் RM50 மில்லியன் அபராதத்தை இதுவரை செலுத்தவில்லை – சட்டத்துறைத் தலைவர்

கோலாலம்பூர், செப்டம்பர் 21 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், வீட்டுக்காவலில் மீதமுள்ள சிறைத்தண்டனையை அனுபவிக்க விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இதுவரை செலுத்தவில்லையென சட்டத்துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் துசுகி மொக்தார் தெரிவித்துள்ளார்.

அபராதத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்றும், பணம் செலுத்தப்பட்ட பின்னர் நஜீப்பை வீட்டுக்காவலுக்கு மாற்றுவதற்கான நடைமுறைக்கு சிறிது காலம் ஆகலாம் என்றும் அவர் கூறினார். வீட்டுக்காவல் தொடர்பான நடைமுறைகளை சிறைத்துறை வெளியிடும்.

SRC International வழக்கில் நஜீப்பின் 12 ஆண்டு சிறைத்தண்டனை 2024 பிப்ரவரியில் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அதேவேளை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் 50 மில்லியனாக குறைக்கப்பட்டதுடன், மீதமுள்ள தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக்காவலில் அனுபவிக்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!