Latestமலேசியா

முதலீட்டு மோசடியில் சிக்கி பொறியாளர் RM330,000 இழப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 23 – அதிக லாபம் கிடைக்குமெனக் கூறி நடத்தப்பட்ட போலி முதலீட்டு மோசடியில் சிக்கிய 47 வயது பொறியாளர் 330,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

2020ஆம் ஆண்டு, முதலீட்டு நிறுவனத்தின் முகவர் எனக் கூறிய தனது ஆண் நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் முதலீடு செய்யத் தொடங்கினார். இதுவரை 10 முறை அந்த நிறுவனத்திற்கு மொத்தம் 330,000 ரிங்கிட் பணத்தை அவர் மாற்றியுள்ளார்.

ஆனால், முதலீட்டுத் தொகையில் ஒருமுறை மட்டுமே 35,000 ரிங்கிட் திரும்பப் பெற்றதாகவும், அதன்பிறகு வாக்குறுதியளிக்கப்பட்ட லாபம் அல்லது பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நண்பரையும், நிறுவனத்தின் உரிமையாளரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொறியாளர், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி டாங் வாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் கிடைத்ததை டாங் வாங்கி இடைக்கால மாவட்டக் காவல் தலைவர் சூப்பிரண்தெண்டன் நுஸுலான் முகமட் டின் (Superintendan Nuzulan Mohd Din) உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!