Latestமலேசியா

நெகிரி செம்பிலான் ஆட்சியாளரை நீக்கும் முயற்சி: மந்திரி பெசார், ஆட்சிக்குழுவுக்கு அன்வார் கடும் கண்டனம்!

நெகிரி செம்பிலான், செப்டம்பர் 23 – நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துவாங்கு முஹ்ரிஸ் அவர்களை ஆட்சிப் பதவியிலிருந்து நீக்க எடுத்த முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக எதிர்த்துள்ளார்.

இந்த நடவடிக்கை மரியாதையற்றதும் நாகரிகமற்றதுமாகும் என்றும், மாநில நிர்வாகத்திற்கு ஆட்சியாளரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் அல்லது அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தாம் துவாங்கு முஹ்ரிஸை சந்திக்க விரும்பியதற்குக் காரணம், நீதிமன்றம் அவரையே நெகிரி செம்பிலானின் சட்டபூர்வமான யாங் டி-பெர்துவான் பெசார் என உறுதி செய்திருந்ததுதான் என்றும் அன்வார் விளக்கினார்.

மேலும், ஆட்சியாளரை நீக்கும் அதிகாரம் Undang Luak அதாவது நெகிரி செம்பிலானின் பாரம்பரிய ஆட்சிமுறை தொடர்பான முடிவுக்கு உட்பட்டிருந்தாலும், அந்த முடிவு முழுமையான அதிகாரம் அல்ல என்றும், அவர்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அன்வார் கூறினார். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றாலும் ஆனால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களைப் பாதுகாப்பது தனது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!