
ஷா ஆலாம், செப்டம்பர்-24,நிறுவனத்தின் வரி நிலுவைக்காக, அதன் இயக்குநர்கள் மீது சுங்க இலாகா தன்னிச்சையாக வெளிநாட்டு பயணத்தடை விதிக்க முடியாது என ஷா ஆலம் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
நிறுவனம் ஒன்று GST வரி பாக்கி வைத்திருந்த காரணத்திற்காக, அதன் 3 முன்னாள் இயக்குநர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 7 ஆண்டுகால வெளிநாட்டு பயணத்தடையை இரத்துச் செய்து நீதிபதி Evawani Farisyta Mohammad உத்தரவிட்டார்.
நிறுவனம் வரி செலுத்தவில்லை என்பதற்காக மட்டுமே ஒருவர் மீது பயணத்தடையைத் திணிக்க சட்டத்தில் இடமில்லை என நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
குறிப்பிட்ட நபர்கள் வரியைச் செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பியோடக்கூடும் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் சுங்க இலாகாவிடம் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தெளிவுப்படுத்தினார்.



