Latestமலேசியா

Perikatan Nasionalலின் செயல்பாடுகள் இடைநிறுத்தம் – Bersatu அளித்த புகாரைத் தொடர்ந்து விளக்கம் கோரும் RoS

கோலாலம்பூர், செப்-24-Perikatan Nasional கூட்டணியின் நடவடிக்கைகளைச் சங்கங்களின் பதிவிலாகாவான RoS இடைநிறுத்தியுள்ளது. Bersatu கட்சி அளித்த புகாரைத் தொடர்ந்து அது அக்கூட்டணியிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. PN கூட்டணியின் விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படுவதைத் தடுப்பதோடு, அதன் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுளாதாக RoS தெரிவித்தது.

எனினும், அந்த இடைநீக்கம் PN-ஐ உடனடியாகப் பதிவு நீக்கம் செய்வதற்கான முடிவு அல்ல. 1966 சங்கங்கள் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி இடைநீக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அதற்கு பதிலளிக்க PN-க்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

முன்னதாக, PN-ஐப் பதிவு நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கோரும் நோட்டீஸ் கிடைத்ததை அக்கூட்டணி உறுதிப்படுத்தியது. PN தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், பதிவு நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான காரணங்களைத் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

PN-இன் உச்சமன்றக் கூட்டத்தில் தங்களைச் சேர்க்கவில்லை என்பதோடு கூட்டணியில் தங்களது உறுப்பினர் நிலை குறித்து பெர்சத்து கட்சி RoS-இடம் இதற்கு முன் புகார் அளித்திருந்தது. அதில் எட்டு விதிமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

PN தொடர்பான அடுத்தகட்ட முடிவு, கூட்டணி அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் அந்த இடைநீக்கம் வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வர பாஸ் முடிவு செய்தது. அதனை அடுத்து Wawasan மற்றும் Pejuang ஆகியவை PN-இன் உறுப்புக் கட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் PN, பாரிசான் நேஷனலுடன் கூட்டணி அமைத்தது Bersatuவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. Bersatu தானாகவே PN-இல் இருந்து விலகி விட்டதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய நிலையில், அதனை அக்கட்சி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!