Latestமலேசியா

இரு பள்ளிச் சிறுமிகள் மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி: காவல் துறையில் புகார் அளித்துள்ளார்

பெர்மாத்தாங் பாவ், செப்-24-பினாங்கு, Permatang Pauhவில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் இரு தொடக்கப்பள்ளி மாணவிகள் மீது மோட்டார் சைக்கிளில் மோதிய நபர் காவல் துறையில் தாமாகவே புகார் அளித்துள்ளார்.

நேற்று காலை 7.20 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிளோட்டி போக்குவரத்துப் பிரிவு காவல் துறையிடம் நேரில் வந்ததாக Seberang Perai Tengah மாவட்ட காவல் தலைவர் உதவி ஆணையர் Nik Aminuddin Raja Abdullah தெரிவித்தார். அச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

8 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் இருவரும் பள்ளிக்குச் செல்ல பாதசாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட பாதையைப் பயன்படுத்திய போது அவர்களை அந்த மோட்டார் சைக்கிளோட்டி மோதியுள்ளார். அதில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

அச்சம்பவம் தொடர்பான 30 விநாடி காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் பரவியது. அது குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!