Latestமலேசியா

முன்னாள் சிலாங்கூர் ஹாக்கி வீரரை வடிகாலில் தள்ளிய சம்பவம்: GE15 வேட்பாளர் கைது

கோலாலம்பூர், செப்-24-15 ஆவது பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பெண் ஒருவர், 79 வயதான முன்னாள் சிலாங்கூர் ஹாக்கி வீரர் ஒருவரை வடிகாலில் தள்ளியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் Taman OUG பகுதியில் உள்ள கடை வரிசைக்கு முன் நிகழ்ந்தது. தள்ளப்பட்டதில் முதியவரின் தலையின் பின்பகுதி, இடது கை மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டதாக Brickfields மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Hoo Chang Hook தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பெண் தம்மைப் பின் தொடர்வதாக முதியவர் நண்பருக்குச் சொந்தமான தையல் கடைக்குள் சென்று கூறியுள்ளார். பின்னர் கடையை விட்டு வெளியே வந்த போது, அங்கு காத்திருந்த அப்பெண் தள்ளியதில் அவர் வடிகாலில் விழுந்தார்.

சம்பவம் தொடர்பான காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் முதியவரைத் தள்ளியதை மறுத்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் ஒரு நாள் காவல் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மனநலப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதியவர் காயங்களுகாக நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!