Latestஉலகம்

வியட்நாம் விமான நிலையத்தில் தவறவிட்ட தங்க ரோலெக்ஸ் கைக்கடிகாரம்: பயணியிடம் ஒப்படைத்த அதிகாரிகளுக்குப் பாராட்டு

ஹனோய், செப்டம்பர்-26 – வியட்நாமின் Dang Nang அனைத்துலக விமான நிலையத்தில் தவறி விழுந்த தங்க ரோலெக்ஸ் (Rolex) கைக்கடிகாரத்தை மீட்டு, அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த விமான நிலைய அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

​விமான நிலைய வளாகத்தில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் பிரிவினர், பாதுகாப்புப் பரிசோதனைச் சாவடியில் கேட்பாரற்றுக் கிடந்த இந்த ஆடம்பரக் கைக்கடிகாரத்தைக் கண்டெடுத்தனர்.

​உடனடியாகப் பாதுகாப்பு கேமரா பதிவுகளை ஆய்வுச் செய்த அதிகாரிகள், அது கோலாலம்பூருக்குப் புறப்படவிருந்த AirAsia AK641 விமானத்தின் பயணி Long Jianming என்பவருக்குச் சொந்தமானது என கண்டறிந்தனர்.

18 கேரட் தங்கத்திலான அந்தக் கைக்கடிகாரம் 251,156 ரிங்கிட் என மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், விமானத்தில் ஏறச் சென்ற குறிப்பிட்ட பயணியை அரை மணிநேரத்திற்குள் அடையாளம் கண்டு, புறப்படுவதற்கு முன்பாகவே அவரிடம் அக்கடிகாரத்தை ஒப்படைத்தனர்.

​தமது விலையுயர்ந்த கடிகாரத்தை மீட்ட அந்தப் பயணி அதிகாரிகளுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றித் தெரிவித்தார்.

வியட்நாம் விமான நிலையப் படையினரின் இந்த நேர்மையான செயல் அனைத்துலக அளவில் பொது மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!