Latestமலேசியா

STEM, TVET கல்வியை மேலும் வலுப்படுத்த வேண்டும் — அமைச்சர் ஏரன் அகோ டகாங் வலியுறுத்து

கனோவிட், செப்டம்பர்-26 – எதிர்கால சவால்களை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், STEM மற்றும் TVET எனப்படும் தொழில்நுட்ப, தொழில் பயிற்சி கல்வியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் வலியுறுத்தியுள்ளார்.

சரவாக், கனோவிட்டில் PPD கனோவிட் 2026 சிறந்த சேவை விருது மற்றும் பாராட்டு விழாவில் உரையாற்றிய அவர், AI, டிஜிட்டல் தொழில்நுட்பம், தானியங்கி முறை மற்றும் புதியத் தொழில் துறைகளின் வளர்ச்சி காரணமாக எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்கள் வேகமாக மாறி வருவதாகக் கூறினார்.

எனவே, மாணவர்களிடையே விமர்சன சிந்தனை, படைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்க வேண்டும் என்றார் அவர்.

அதே சமயம், TVET கல்வியை இரண்டாம் நிலைத் தேர்வாகக் கருதாமல், நாட்டுக்குத் தேவையான உயர்திறன் கொண்ட மனிதவளத்தை உருவாக்கும் முக்கிய கல்விப் பாதையாகக் கருத வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் இருப்பிடம் அல்லது சமூகப் பொருளாதாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் டத்தோ ஏரன் வலியுறுத்தினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!