
கோலாலம்பூர், செப்-28-நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தேசிய ஒற்றுமை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார். இளைஞர்களின் கல்வி, திறன், வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, தலைமைத்துவம் மற்றும் நலன்களை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
TUBE, Rakan Muda, MyLesen B2 2026, SejaTi MADANI, PLKN 2026, K-Youth மற்றும் ILKBS உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டில் Yayasan Sukarelawan Siswa (YSS) 958 சமூகத் திட்டங்கள் மூலம் 277,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்ததுடன், Yayasan Tunku Abdul Rahman (YTAR) 12,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உதவியுள்ளதாகவும் GEMA Gempita MADANI 2026 நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
13 ஆவது மலேசியத் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாடு, நுண்-சான்றிதழ் (micro-credential) வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி, தொழில்முனைவு மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். Jelajah Belia Rukun Negara, Jalinan Integrasi Mahasiswa, Misi Sukarelawan Siswa மற்றும் Debat Perpaduan உள்ளிட்ட திட்டங்கள் மூலம் இளைஞர்களின் சமூகப் பங்கேற்பு தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் என்றாரவர்.
மலேசியாவின் எதிர்காலம் இன்றைய தலைமுறையினரின் கையில் உள்ளதாகக் குறிப்பிட்ட Aaron, 2040 மற்றும் 2063ஆம் ஆண்டுகளில் காண விரும்பும் நாட்டை உருவாக்க இளைஞர்கள் பொறுப்புடன் பங்களிக்க வேண்டும் என்றார்.
GEMA Gempita MADANI 2026 நிகழ்வில் Policy Talk & Youth Forum, Mega Autoshow, ‘Jom Masuk U’, GEMA MADANI இசை நிகழ்ச்சி, GEMA Bazaria, அரசு சாரா அமைப்புகளின் ஒன்றுகூடல் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சுமார் 1,000 பேர் பங்கேற்ற GEMA Neon Run நிகழ்ச்சியும் நடைபெற்றது.



