
கோலாலம்பூர், செப்-29-கோலாலம்பூரில் உள்ள சன்வே லகூனில், தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய திகில் திருவிழாவாகக் கருதப்படும் ‘Nights Of Fright® 12: APE-OCALYPSE’ செப்டம்பர் 25 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்நிகழ்வு, அச்சமூட்டும் வீடுகள், திகில் மண்டலங்கள், நேரடி பொழுதுபோக்கு மற்றும் ஊடாடும் அனுபவங்களை உள்ளடக்கியிருக்கிறது.
12 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்நிகழ்வு, ஆசியா மற்றும் உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து பெறப்பட்ட திகில் கதைகளை ஒருங்கிணைத்து புதிய அனுபவத்தை வழங்குகிறது. இம்முறை முக்கியக் கருப் பொருளாக ‘APE-OCALYPSE’ இடம் பெறுவதுடன், ‘Yokai Road’, ‘The Freezer: Fresh Meat’, ‘Little Shop of Horrors: Manga UV 3D’, ‘The Not-So-Wonderful Wizard of Oz’, ‘Return to Silent Hill’, ‘The Romeos & Juliet’ மற்றும் ‘Horrorwood Wax Studios’ உள்ளிட்ட எட்டு அச்சமூட்டும் வீடுகளும் உள்ளன.
மேலும், ‘Scarytales Immersive Theatre: Pontianak vs Pocong: Origins’ எனும் அச்சுறுத்தும் நாடக அரங்கம், மலேசிய மற்றும் தென்கிழக்காசிய நாட்டுப்புற நம்பிக்கைகளில் காணப்படும் பொண்டியானாக், பொச்சோங் கதைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனுடன் ‘The Hungry Ghosts’, ‘Malaya Mayhem’ மற்றும் ‘The Scream Scene’ ஆகிய மூன்று திகில் மண்டலங்களும், எட்டு சாகச விளையாட்டுகளும் நேரடி நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்நிகழ்வில் சன்வே லகூன் மற்றும் The Sudden Impact! Entertainment Company கைகோர்த்துள்ளன. ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகள், திகில் திரைப்படங்கள், மங்கா, கே-பாப் கலாச்சாரம் மற்றும் தென்கிழக்காசிய அமானுஷ்யக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இம்முறை நிகழ்வில் இணைக்கப்பட்டுள்ளன. தொடக்க வார இறுதியில் சிறப்பு புகைப்பட அனுபவங்கள், மினி தருமா பொம்மை, Mystery Box Challenge, இலவச டாரோட் வாசிப்பு மற்றும் DJ நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் இடம் பெறுகின்றன.
Nights Of Fright® 12-க்கான நுழைவுச்சீட்டு 138 ரிங்கிட் முதல் தொடங்குகிறது; 236 ரிங்கிட் கட்டணத்தில் நுழைவுச்சீட்டுடன் Express Pass-உம் வழங்கப்படுகிறது. சன்வே சூப்பர் செயலி, KLOOK மற்றும் சன்வே லகூனின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம். அந்நிகழ்வு நவம்பர் 7ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும்.



