Latestமலேசியா

மலாக்கா மிருகக்காட்சி சாலையில் கருஞ்சிறுத்தைக் குட்டி; பெயர் சூட்ட பொதுமக்களுக்கு அழைப்பு!

மலாக்கா, அக்டோபர்-1,மலாக்கா மிருகக்காட்சி சாலையில் புதிதாகப் பிறந்த ஆண் கருஞ்சிறுத்தைக் குட்டிக்கு பெயர் சூட்ட பொது மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 22-ஆம் தேதி இயற்கையான இனப்பெருக்கத்தின் மூலம் பிறந்த இந்தக் குட்டி, 6 வயதான பெண் சிறுத்தை Beting மற்றும் 11 வயதான ஆண் சிறுத்தை Tommy ஆகியவற்றின் குட்டியாகும்.

பிறக்கும் போது 1.09 கிலோ கிராம் எடையிருந்த இந்தக் குட்டி, தற்போது ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வளர்ந்து வருவதாக மலாக்கா மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீல-சாம்பல் நிறக் கண்கள் மற்றும் கருமையான உடல் தோற்றத்தைக் கொண்ட இந்தக் குட்டிக்கு பொருத்தமான பெயரை பரிந்துரைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து சமூக ஊடகங்களில் பலரும் ஆர்வத்துடன் பெயர்களைப் பரிந்துரைத்து வருகின்றனர்.

T’Chaka, Taming Sari, Wakanda, Bintang, Kasturi மற்றும் Arang உள்ளிட்ட பல பெயர்கள் இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கருஞ்சிறுத்தை என்பது தனி உயிரின வகை அல்ல; மரபணு காரணமாக உடல் முழுவதும் கருமையாகத் தோன்றும் சிறுத்தையே பொதுவாக கருஞ்சிறுத்தை என அழைக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!