Latestமலேசியா

எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த 100 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியிட G7 நாடுகள் ஒப்புதல்

பாரீஸ், அக்டோபர்-3,உலகளவில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 100 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் டீசலைச் சந்தையில் வெளியிட G7 நாடுகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளன.

​ஐரோப்பிய நாடுகள் தங்களின் கையிருப்பு டீசலை வெளிச் சந்தைக்குக் கொண்டு வராவிட்டால், அமெரிக்காவிலிருந்து டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

​அனைத்துலக எரிசக்தி நிறுவனம் (IEA) ஒருங்கிணைப்பில், அடுத்த 4 மாதங்களுக்குள் இந்த 100 மில்லியன் பீப்பாய்கள் விடுவிக்கப்படவுள்ளன.

குறிப்பாக, முதல் 20 நாட்களிலேயே பெருமளவிலான டீசல் சந்தைக்கு வரவுள்ளது.

​அதே சமயம், G7 நாடுகள் தங்களுக்குள் எரிபொருள் ஏற்றுமதிக்கு எவ்விதத் தடைகளும் விதிக்கக் கூடாது என்றும் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

​மத்தியக் கிழக்குப் போர் பதற்றங்களால் Brend கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டி விற்கப்பட்டு வருகிறது.

​இந்த அவசரகால நடவடிக்கை போக்குவரத்துத் துறைக்கும், சாமானியப் பயனீட்டாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி சுமையைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!