Latestமலேசியா

பாச்சோக்கில் 5 தெருநாய்கள் தாக்கியதில் 8 வயது சிறுவனின் தலை, கழுத்தில் காயங்கள்

பாச்சோக், அக்டோபர்-3 – கிளந்தான், பாச்சோக்கில் 5 தெருநாய்கள் கடித்துக் குதறியதில், 8 வயது சிறுவன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயமடைந்தான்.

Pantai Kuala Kemasin கடற்கரையில் வியாழக்கிழமை காலை சுமார் 9.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

Azuar Firdaus Zuraiman என்ற அந்தச் சிறுவன், தனது உறவினர்களுடன் மணலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சுமார் 5 நாய்கள் அவர்களை நோக்கி ஓடி வந்துள்ளன.

அங்கிருந்த சிறுவர்கள் தப்பியோடிய நிலையில், Azuar கீழே விழுந்ததைத் தொடர்ந்து நாய்கள் அவனைத் தாக்கிக் கடித்ததாக அவரது தந்தைத் தெரிவித்தார்.

நாய்களிடமிருந்து தப்பிக்க Azuar கடலை நோக்கி ஓடியதாகவும், தண்ணீர் கழுத்து அளவை எட்டிய பின்னரே நாய்கள் துரத்துவதை நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.

அருகிலிருந்த உல்லாசத் தல ஊழியர் ஒருவர் நாய்களை விரட்டி சிறுவனைக் காப்பாற்றினார்.

பின்னர் சிறுவன் கோத்தா பாருவில் உள்ள Raja Perempuan Zainab II மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டான்.

அங்கு கடிபட்ட காயங்களைச் சுத்தப்படுத்தி தையல் போடுவதற்கான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கழுத்தில் இரண்டு மற்றும் தலையில் இரண்டு ஆழமான கடித்த தடயங்கள் இருப்பதாக அவரது தந்தை தெரிவித்தார்.

சிறுவன் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்வதாக பாச்சோக் போலீஸார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!