Latestஉலகம்

COP31 பருவநிலை மாநாடு தோல்வி; புதைபடிவ எரிபொருள் விவகாரத்தில் நாடுகளிடையே கடும் கருத்து வேறுபாடு

அன்டால்யா, துருக்கி, நவம்பர்-23,துருக்கியில் நடைபெற்ற COP31 உலகப் பருவநிலை மாநாடு, முக்கிய உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.

நிலக்கரி, பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட _fuel fossils_ எனப்படும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பில் நாடுகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள், புதைபடிவ எரிபொருட்கள் குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடாத இறுதி ஒப்பந்த நகலை ஏற்க மறுத்தன.

இதனால், திட்டமிட்ட நேரத்தைக் கடந்து 44 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

உடன்பாடு எட்டப்படாததால், இறுதி முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மாநாட்டுத் தலைவர் Murat Kurum அறிவித்தார்.

இதனிடையே, சவூதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள், புதைபடிவ எரிபொருட்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த மாநாட்டுத் தோல்வி, உலகளாவிய பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!