Latestமலேசியா

நான்காம் ஆண்டு Matrix மதிப்பீட்டின் DLP வினாத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெறாதது ஏன்? விளக்கம் கோரும் தினகரன்

சைபர்ஜெயா, அக்டோபர் 7 – மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மின்னணு வர்த்தகச் சூழலின் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இன்று மின்னணு வர்த்தகத் தளங்கள், அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது.

இணையவழி மற்றும் நேரடி வணிகங்களுக்கிடையே சமநிலையை ஏற்படுத்துவது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PKS), அஞ்சல் மற்றும் விநியோகத் துறைகளில் மின்னணு வர்த்தகத்தின் தாக்கம் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

விற்பனையாளர்களின் அடையாளத்தைச் சரிபார்த்து, விற்பனை செய்யப்படும் பொருட்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டவையா என்பதை உறுதி செய்யுமாறு தளங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட, ஆபத்தான மற்றும் சட்டவிரோதப் பொருட்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

Grab, Lazada, Facebook Marketplace, Pinduoduo, SHEIN, Shopee மற்றும் TikTok Shop உள்ளிட்ட 9 மின்னணு வர்த்தகத் தளங்களும், 11 அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களும் ஆலோசனையில் பங்கேற்றன. நுகர்வோர் பாதுகாப்பு, சட்ட இணக்கம் மற்றும் தளங்களின் பொறுப்புணர்வை வலுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என MCMC தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!