Latestமலேசியா

போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி உயிரிழப்புக்குக் காரணமானதாக இ-ஹெய்லிங் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாம், அக்.08-போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை ஓட்டி, மாலத்தீவைச் சேர்ந்த 22 வயது மாணவி உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக 37 வயது இ-ஹெய்லிங் ஓட்டுனர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் Muhamad Syafiq Ibrahim எனும் அந்நபர் 1987-ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மற்றொரு பயணிக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டையும் மறுத்து விசாரணை கோரினார்.

அக்டோபர் 4-ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் டாமன்சாரா-புச்சோங் நெடுஞ்சாலையில் Puchong Selatan டோல் சாவடி அருகே அவ்விபத்து நிகழ்ந்தது. அவர் ஓட்டிச் சென்ற Ativa வாகனம் மற்றொரு காருடன் மோதி கவிழ்ந்ததில், ஒரு பயணி காயமடைந்ததுடன் மாலத் தீவைச் சேர்ந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Shafiqகிற்கு குறைந்த பிணைத் தொகையைக் கோரப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 3,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 9,000 ரிங்கிட் பிணையுடன் ஒரு நபர் உத்தரவாதத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

மேலும், வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. அவ்வழக்கு டிசம்பர் 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!