Latestமலேசியா

தீபாவளியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று நிதியுதவி வழங்கத் திட்டம் – தெலுக் இந்தான் DAP

தெலுக் இந்தான், அக்.08-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ங்கா கோர் மிங் (Nga Kor Ming) மற்றும் வூ கா லியோங் (Woo Kah Leong) தலைமையிலான தெலுக் இந்தான் DAP, அந்நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இடைநிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளது.

மேலும், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன், உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும் நேரடியாக நிதியுதவி வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

Jalan Changkat Jongங்கில் உள்ள ஸ்ரீ வெள்ளை ஆலய மண்டபத்தில் தமிழ்மொழிப் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு முதல் தெலுக் இந்தான் தொகுதியில் மட்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ஏறக்குறைய 1 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

இந்தியச் சமூகத்தினர் நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தெலுக் இந்தான் தொகுதியின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் அந்நிதியுதவி வழங்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

இதனிடையே, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் மற்றும் Pasir Bedamar தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதுடன், Changkat Jong தொகுதியையும் கைப்பற்ற மக்களின் தொடர் பேராதரவு தேவை என ங்கா கோர் மிங்கும் Woo Kah Leongங்கும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!