Latestமலேசியா

பினாங்கு டத்தோ கெராமட் ஆலயத்தைத் தூய்மைப்படுத்திய பல இன ஊழியர்கள்; ஒற்றுமையைப் பறைசாற்றிய நெகிழ்ச்சியான செயல்

பினாங்கு, அக்டோபர் 8 – பினாங்கு, டத்தோ கெராமட் பகுதியில் உள்ள இந்து ஆலயத்தை Citadines Connect Georgetown Penang ஹோட்டலின் பல இன ஊழியர்கள் ஒன்றிணைந்து தூய்மைப்படுத்திய செயல், மலேசியர்களின் மனங்களை நெகிழ வைத்துள்ளது.

இனம், மதம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, ஆலயத்தின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களை ஊழியர்கள் தண்ணீர் ஊற்றிக் கழுவும் காணொளி, அக்டோபர் 7ஆம் தேதி ஹோட்டலின் Instagram பக்கத்தில் பகிரப்பட்டது.

“வெவ்வேறு பின்னணிகள்; ஒரே சமூகம், ஒரே இதயம்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இக்காணொளி, இணையவாசிகளின் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மத வேறுபாடுகளைக் கடந்து வெளிப்பட்ட ஊழியர்களின் மனிதநேயத்தையும் ஒற்றுமை உணர்வையும் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

உள்ளூர் சமூகத்திற்கு தொடர்ந்து உதவி வரும் இந்த ஹோட்டல் ஊழியர்களின் செயல், மத நல்லிணக்கத்தையும் மலேசியர்களின் உண்மையான ஒற்றுமையையும் மீண்டும் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!