Latestமலேசியா

மோசமடையும் புகைமூட்டம்: 5 மாநிலங்கள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இன்று பள்ளிகள் மூடல்

கோலாலம்பூர், அக்டோபர்-9,நாட்டில் மோசமடைந்து வரும் புகைமூட்டம் காரணமாக, 5 மாநிலங்கள் மற்றும் இரு கூட்டரசுப் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை பள்ளிகள் மூடப்படுகின்றன.

ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களிலும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாகக் கல்வியமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக் அறிவித்துள்ளார்.

பஹாங்கில் ரொம்பின் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகைமூட்ட நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஃபாட்லீனா தெரிவித்தார்.

பள்ளிகள் மூடப்படுவதால் பெற்றோரின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்திருப்பதாகவும், இனிவரும் காலங்களில் பள்ளி மூடல் குறித்த அறிவிப்புகள் முன்கூட்டியே வெளியிடப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வீட்டிலிருந்தே தொடர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

புகைமூட்டம் நீடிக்கும் நிலையில், பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு, உடல்நலப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!