Latestமலேசியா

ஜோகூர் பாருவில் வாடகை அறையில் பெண்ணும் ஆணும் கைது

ஜோகூர் பாரு, அக்டோபர் 13 – ஜோகூர் பாருவில் (Johor Bahru), குடும்பப் பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய சுமார் 50 வயதுடைய திருமணமான பெண் ஒருவரும், 60 வயதைக் கடந்த விவாகரத்து பெற்ற ஆண் ஒருவரும் வாடகை அறையில் தனிமையில் இருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்திய ஜோகூர் இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள், இருவரும் கணவன்–மனைவி அல்ல என்பதை உறுதிப்படுத்தினர். விவாகரத்து நடவடிக்கை இன்னும் முடிவடையாத நிலையில், தாம் விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறிய பெண்ணுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

இருவரும் தகாத முறையில் தனிமையில் இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, மேல்நடவடிக்கைக்காக ஷரியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்டவுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!