Latestமலேசியா

புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்காவில் பள்ளிகள் நாளை மீண்டும் திறப்பு

கோலாலம்பூர், அக்-14-புத்ராஜெயாவிலும் நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக மூடப்பட்ட கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

புத்ராஜெயா கூட்டரசு பிரதேசக் கல்வித் துறை, மாணவர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பள்ளிகளில் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தங்கள் பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து அவர்களை வீட்டில் வைத்திருக்கலாம் என்றும் அது தெரிவித்தது

பள்ளிகள் காற்றின் தரத்தைக் கண்காணித்து, மாணவர்கள் மற்றும் பள்ளிச் சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது. காற்றுத் தூய்னைக்கேட்டுக் குறியீடு (API) 100-ஐத் தாண்டினால், உடற்கல்வி, விளையாட்டு, முகாம்கள், பள்ளி ஒன்றுகூடல்கள் உள்ளிட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்றும் அது கூறியது.

மலாக்காவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவு, தற்போதைய காற்றின் தர நிலவரத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் மத விவகாரங்களுக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் Datuk Rahmad Mariman தெரிவித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரின் உடல்நல பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உடல்நிலையைக் கண்காணித்து, காற்றுத் தூய்மைக்கேடு தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவரை நாடுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!