Latestமலேசியா

புகைமூட்டம்: கிள்ளான் பள்ளத்தாக்கின் சில பகுதிகள் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன

கோலாலம்பூர், அக்-15-நாட்டில் புகைமூட்டம் மோசமடைந்து வருகிறது. 34 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனிடையே, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள சில பகுதிகளில் காற்றின் தரம் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையை நெருங்கி வருகிறது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, சிலாங்கூரில், Johan Setiaவில் API குறியீடு மிக உயர்வாக 192 ஆகப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கிள்ளான் (191), Shah Alam (179), புத்ராஜெயா (175), செராஸ் (172), Banting (170), பெட்டாலிங் ஜெயா (168), Batu Muda (162), கோலா சிலாங்கூர் (161) என்ற நிலையில் இருக்கின்றன.

ஜோகூர் மாநிலத்திலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. Larkin (187), பத்து பஹாட் (182), பாசீர் கூடாங் (181), Tangkak (177), Pengerang (170), குளுவாங் மற்றும் கோத்தா திங்கியில் (165) என்ற API குறியீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெகிரி செம்பிலானில் நீலாய் (187), சிரம்பான் (182), போர்ட்டிக்சன் (176) என்றும், மலாக்காவில் Bukit Rambai (184), மலாக்கா நகரம் (178), அலோர் காஜா (176) என்றும் உள்ளன.

பேராக்கில் தஞ்சோங் மாலிம் (168), Seri Manjung (167), Pegoh Ipoh (110) மற்றும் Tasek Ipoh (108) என API குறியீடுகள் பதிவாகியுள்ளன. பகாங்கில் Temerloh (156), Jerantut (152), Rompin மற்றும் Indera Mahkotaவில் (151) என்றும் சரவாக்கில் Samarahan (152), Serian (120) என்றும் இருக்கின்றன.

API அளவீட்டின்படி, 0 முதல் 50 வரை நல்ல காற்றின் தரத்தையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும் குறிக்கின்றன. 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்படுகிறது. 300க்கு மேல் உள்ள அளவுகள் அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!