
கோலாலம்பூர், அக்-16-MRT Kajang வழித்தடத்தில் இன்று காலை ரயில் சேவைகள் தாமதமடைந்தன. கேபிள் திருடும் முயற்சி, தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் ஆகியவற்றை அடுத்து அப்பாதிப்பு ஏற்பட்டது.
Phileo Damansara மற்றும் Pusat Bandar Damansara நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டதாக Rapid KL நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்தது.
ரயில்கள் தற்காலிகமாகக் குறைந்த வேகத்தில் இயக்கப்படுவதுடன், சில நிலையங்களில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் என்றும் அது கூறியது.
பயணிகள் தேவைப்பட்டால் நிலைய ஊழியர்கள் அல்லது துணைக் காவல் வீரர்களிடம் உதவி கோரலாம்.
ரயில் சேவைகளின் தாமதத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு Rapid KL மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.



