Latestமலேசியா

நஜீப் வீட்டுக் காவல் நிபந்தனைகளை வெளியிட வேண்டும் – டிஏபி எம்.பி. வலியுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 16 – முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் நிபந்தனைகளை வெளியிடத் தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் சிறைத் துறைக்கு, டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (Lim Lip Eng) கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டுக் காவல் நிபந்தனைகளை மறைப்பது நியாயமற்றது என்றும், நஜீப்பை யார் சந்திக்கலாம், அவர் இணையம் மற்றும் கைப்பேசியைப் பயன்படுத்தலாமா, எவ்வாறு கண்காணிக்கப்படுவார் போன்ற விவரங்களைப் பொதுமக்கள் அறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2022ஆம் ஆண்டு ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி குற்றங்களுக்காக நஜீப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் தண்டனையும் அபராதமும் குறைக்கப்பட்டன.

2026 செப்டம்பர் 18ஆம் தேதி வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பின்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தி, மற்ற நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால், 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க நஜீப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!