Latestஉலகம்

2027-ல் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகும் இந்தியா

பாங்காக், அக்டோபர் 16-2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா, ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என சர்வதேச நாணய நிதியமான IMF கணித்துள்ளது.

அந்த ஆண்டில் இந்தியாவின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 4.52 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது நான்காவது இடத்தில் உள்ள ஜப்பான் ஆறாவது இடத்துக்குச் சரியும். பிரிட்டனும் ஜப்பானை முந்தும் என IMF-ன் கணிப்பு தெரிவிக்கிறது.

உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 7 விழுக்காடாக IMF உயர்த்தியுள்ளது.

இதற்கு மாறாக, முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட கட்டமைப்புச் சிக்கல்களால் ஜப்பானின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. எரிசக்தி விலை உயர்வின் தாக்கத்தால், ஜப்பானின் வளர்ச்சி 2026-ல் 0.7 விழுக்காடாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகத் தொடர்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் சீனாவும் ஜெர்மனியும் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!