Latestமலேசியா

ஜோகூரில் TNB மின் நிலையத்தில் தீ விபத்து; இரு ஊழியர்கள் காயம்

தெப்ராவ், அக்டோபர்-17,ஜோகூர், கங்கார் தெப்ராவ் பகுதியில் உள்ள TNB பிரதான மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அதன் தொழில்நுட்பப் பணியாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள TNB நிறுவனம், காயமடைந்த இரு ஊழியர்களும் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவம் குறித்து இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளும் ஆதரவும் வழங்கப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்தது.

காயமடைந்த இருவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் TNB தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஊழியர்களின் காயங்களின் தீவிரம் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!