
புத்ராஜெயா, அக்டோபர்-18 – வரும் நவம்பர் 1 முதல் QR சேவைகளுக்குச் சேவை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் போஸ்டர் முற்றிலும் தவறானது எனப் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களில் கூறப்பட்டுள்ளவாறு கட்டணம் வசூலிப்பது குறித்து எத்தகைய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என, நிதியமைச்சு தெளிவுப்படுத்தியது.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம் என பொது மக்களை அமைச்சு நினைவுறுத்தியது.
அதே சமயம், பொய்ச் செய்திகளைப் பகிருவதைத் தவிர்க்குமாறும் MoF கேட்டுக் கொண்டது.
எனவே, எத்தகைய உண்மையான தகவலாக இருந்தாலும் நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மூலமாக மட்டுமே பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



