Latestமலேசியா

கோலாலம்பூர் ஸ்ரீ கோத்தாவில் 11வது சமூக மத்தியஸ்த மையம் திறப்பு; நீதிமன்றம் செல்லாமல் பிரச்சினைகளுக்குத் இலவசத் தீர்வு

கோலாலம்பூர், அக்டோபர்-18 – கோலாலம்பூர், ஸ்ரீ கோத்தா மக்கள் குடியிருப்பில் நாட்டின் 11-ஆவது சமூக மத்தியஸ்த மையம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

​தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் இதனைத் தொடக்கி வைத்தார்.

சமூகப் பிரச்சனைகளுக்கு நீதிமன்றப் படிகள் ஏறாமல், அமைதியான முறையில் தீர்வு காணும் ஒரு மையமாக இது செயல்படும் என்றார் அவர்.

முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இச்சேவை, நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த உதவுகிறது.

​மலேசியாவின் இந்தச் சாதனை ஆசியான் வட்டாரத்திற்கே முன்னுதாரணமாக திகழ்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் மேலும் 12 புதிய மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

இதுவரை 617 மத்தியஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 2023 முதல் 2026 வரை நீதிமன்றம் செல்லாமல் 521 சமூக மற்றும் அண்டை வீட்டார் பிரச்சனைகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளன.

​இத்தகைய முன்னெடுப்புகள் மக்களிடையே உரையாடலையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!