Latestமலேசியா

பாசீர் பூத்தேவில் பூனையைப் பாலியல் துன்புறுத்தியதாக ஆடவர் கைது; காணொளி வைரல்

பாசீர் பூத்தே, அக்டோபர்-20,கிளந்தான், பாசீர் பூத்தேவில், பூனைக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட அருவருப்பான சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

Threads செயலியில் வெளியான அந்த வீடியோ குறித்துப் புகார்கள் வந்ததை அடுத்து, போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக பாசிர் பூத்தே மாவட்டப் போலீஸ் தலைவர் Saari Yaacob தெரிவித்தார்.

அவ்வாடவர் தனது வீட்டில் பூனைக்குத் தீங்கு விளைவிக்கும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இது மக்கள் மத்தியில் பரவலாகக் கண்டனத்தை எழுப்பியது.

SAFM எனப்படும் கைவிடப்பட்ட விலங்குகளுக்கான மலேசியச் சங்கமும் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, குற்றவியல் சட்டம் மற்றும் MCMC சட்டத்தின் கீழ் சந்தேக நபர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்கும் வகையிலும், முறையற்ற உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் அந்த வீடியோவை யாரும் பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் எனப் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!