Latestமலேசியா

கோலாலம்பூரில் அதிக காற்று மாசு; ஏழு இடங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் பதிவு

கோலாலம்பூர், அக்டோபர் 20 – மலேசியாவில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி, கோலாலம்பூரிலுள்ள பத்து மூடா (Batu Muda) பகுதியில் காற்று மாசுக் குறியீடு (IPU) 174 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டிலேயே அதிகமான அளவாகும்.

சிலாங்கூர் ஜோஹான் செத்தியா (Johan Setia) பகுதியில் IPU 171 ஆகவும், பெட்டாலிங் ஜெயா (Petaling Jaya), ஷா ஆலம் (Shah Alam) ஆகிய இடங்களில் 169 ஆகவும், செராஸ் (Cheras) பகுதியில் 168 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் 28 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

ஜோகூரிலுள்ள கோத்தா திங்கி (Kota Tinggi) பகுதியில் IPU 156 ஆகவும், பேராக் தாசெக், ஈப்போ (Tasek, Ipoh) பகுதியில் 156 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், சரவாக் மாநிலத்தில் காற்றின் தரம் மிதமானது முதல் நல்ல நிலை வரை உள்ளது.

நாடு முழுவதும் ஏழு இடங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளது. கிமானிஸ் (Kimanis) பகுதியில் மிகக் குறைந்த IPU அளவான 27 பதிவாகியுள்ளது. லங்காவி (Langkawi) பகுதியில் IPU 38 ஆக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!