
பாலி, அக்டோபர் 20 – இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மலேசியாவும் இந்தோனேசியாவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இந்த முயற்சியில் சிங்கப்பூரையும் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil), மூன்று நாடுகளும் பங்கேற்கும் கூட்டத்தை வரும் டிசம்பர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, இந்தோனேசியாவின் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளன. சமூக ஊடகப் புகார்களைக் கையாள்வதில் மலேசியாவின் அனுபவம் இந்தோனேசியாவுக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, சிங்கப்பூர் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo), ஃபஹ்மியைச் சந்தித்து, குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைத்தொடர்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.



